உளுந்தூர்பேட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு


உளுந்தூர்பேட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு
x

உளுந்தூர்பேட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

விநாயகர் சதுர்த்தியையொட்டி உளுந்தூர்பேட்டை பகுதியில் 64 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த சிலைகள் வெள்ளிக்கிழமை நகர பகுதியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலையில் கரைக்கப்பட உள்ளது. விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி நகரின் மையப்பகுதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பு 24 வார்டுகளையும் சுற்றி மீண்டும் போலீஸ் நிலையத்தில் முடிவடைந்தது. இந்த அணிவகுப்பின்போது, விநாயகர் சிலை ஊர்வலத்தில், அசம்பாவிதங்கள் ஏற்படும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story