விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்திய போலீசார்


விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்திய போலீசார்
x

விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு போலீஸ் நிலையத்திலேயே சக போலீசார் நடத்திய வளையகாப்பு நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை

சென்னை விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருபவர் அன்பரசி. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள இவர், பிரசவத்துக்காக சொந்த ஊருக்கு செல்ல உள்ளார்.

இந்த நிலையில் அன்பரசிக்கு போலீஸ் நிலையத்தில் வளைகாப்பு நடத்த அவருடன் பணிபுரியும் சகபோலீசார் முடிவு செய்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் பூபதிராஜா தலைமையில் பெண் போலீஸ் அன்பரசிக்கு அனைவரும் சேர்ந்து வளைகாப்பு நடத்தினார்கள்.

இதில் போலீசார் அனைவரும் தாய் வீட்டில் சீர் செய்வதுபோல் சீர்வரிசை தட்டுகள் வைத்து அன்பரசிக்கு வளைகாப்பு நடத்தி பிரசவத்துக்காக அவரை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பெண் போலீசுக்கு போலீஸ் நிலையத்திலேயே சக போலீசார் நடத்திய வளையகாப்பு நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

1 More update

Next Story