இரட்டிப்பு பண மோசடி புகாரில் வாலிபரிடம் போலீசார் விசாரணை


இரட்டிப்பு பண மோசடி புகாரில் வாலிபரிடம் போலீசார் விசாரணை
x

இரட்டிப்பு பண மோசடி புகாரில் வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

தாரமங்கலம்:

மேட்டூர் மாதையன் குட்டை பகுதியை சேர்ந்தவர் வேல்பாண்டி (வயது 32). இவர் மேட்டூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் தங்களது நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தினால் இரட்டிப்பு பணம் தருவதாக கூறினாராம். இதையடுத்து பல பேரிடம் பணம் வசூல் செய்த அவர் இரட்டிப்பு பணத்தை கொடுக்காமல் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேல்பாண்டி தனது நண்பர்களுடன் மேட்டூரில் இருந்து சொகுசு காரில் தாரமங்கலம் நோக்கி செல்வதாக பணம் கொடுத்த பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொதுமக்கள் வாகனங்களில் அந்த காரை பின்தொடர்ந்து சென்று தாரமங்கலம் பகுதியில் சுற்றிவளைத்து மறித்தனர்.

இதையடுத்து காரில் இருந்த வேல்பாண்டி, அவருடைய நண்பர்களை தாரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரித்ததில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் பகுதியில் பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வேல்பாண்டி மற்றும் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story