கணவரை தவிக்க விட்டு திருமணமான இளம்பெண் 17 வயது சிறுவனுடன் ஓட்டம்


கணவரை தவிக்க விட்டு திருமணமான இளம்பெண்  17 வயது சிறுவனுடன் ஓட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2023 1:55 AM IST (Updated: 22 Aug 2023 10:59 AM IST)
t-max-icont-min-icon

திருமணமான 21 வயது இளம்பெண், 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்

அன்னதானப்பட்டி

சேலம் அன்னதானப்பட்டியில் 17 வயது சிறுவனுடன் இளம்பெண் ஓட்டம் பிடித்தார்.

வெள்ளி பட்டறையில் வேலை

சேலம் அன்னதானப்பட்டி சேர்ந்த 17 வயது சிறுவன், அந்த பகுதியில் உள்ள வெள்ளிப்பட்டறையில் வேலைக்கு சென்று வந்துள்ளான். கடந்த 14 -ந் தேதி காலையில் வழக்கம் போல வேலைக்கு சென்ற சிறுவன், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுவனை பல இடங்களில் தேடினர். ஆனால் சிறுவன் எங்கும் கிடைக்கவில்லை. மேலும் அவனுடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள், தங்களது மகனை காணவில்லை என அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஓட்டம்

போலீசார் விசாரணையில், சிறுவன் வேலை செய்து வந்த வெள்ளிப்பட்டறையில் உடன் வேலை செய்த 21 வயதான இளம்பெண்ணும் அதே நாளில் மாயமாகி இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த பெண்ணின் கணவரும் தனது மனைவியை காணாமல் தேடி வந்துள்ளார்.

அவர்கள் இருவரும் ஓட்டம் பிடித்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான இளம்பெண்ணுடன் 17 வயது சிறுவன் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story