வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்


வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
x

ஏலகிரி மலையில் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட சாலைகள் உள்ளது. இதனால் மலையேறும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏலகிரி மலை போலீஸ் நிலையம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் மயில்வாகனன் தலைமையில் கொட்டையூர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் காரில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனம் ஓட்டும் நபர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story