துப்பாக்கி சுடும் போட்டியில் போலீஸ் அதிகாரிகள் அசத்தல்


துப்பாக்கி சுடும் போட்டியில் போலீஸ் அதிகாரிகள் அசத்தல்
x

துப்பாக்கி சுடும் போட்டியில் போலீஸ் அதிகாரிகள் அசத்தினர்.

திருச்சி

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவின்படி, திருச்சி மத்திய மண்டல காவல்துறை தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1-ம் அணி மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 10-ம் அணிகளுக்கு உட்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு முதல் ஐ.ஜி. வரையிலான அதிகாரிகளுக்கான பிஸ்டல், ரிவால்வர் மற்றும் இன்சாஸ் ரைபிள் ரக துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நேற்று நடைபெற்றது. போட்டியில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 25 காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், 5.56 இன்சாஸ் ரைபிள் ரக போட்டியில் முதல் பரிசு பெற்றார். ஒட்டுமொத்த போட்டியில் 2-வது இடம் பிடித்தார். கண்டோன்மெண்ட் உதவி போலீஸ் கமிஷனர் அஜய்தங்கம் 9 எம்.எம். பிஸ்டல் பிரிவிலும், ஒட்டுமொத்த போட்டியிலும் 3-வது இடத்தை பிடித்தார். வெற்றி பெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு மாநகர கமிஷனர் பரிசுகள் வழங்கினார்.

1 More update

Next Story