தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு கடைவீதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு; கேமராக்களும் பொருத்தப்படுகிறது


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு கடைவீதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு; கேமராக்களும் பொருத்தப்படுகிறது
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு கடைவீதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. அங்கு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படுகிறது.

ஈரோடு


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு கடைவீதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. அங்கு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படுகிறது.

ஜவுளி கடைகள்

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது.இதையொட்டி பொதுமக்கள் தற்போது இருந்தே புத்தாடைகள், நகைகள் வாங்க கடை வீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். ஈரோடு மாநகரில் பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, நேதாஜிரோடு, ஆர்.கே.வி.ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் ஜவுளி கடைகள் உள்ளன. இதேபோல் ஆர்.கே.வி.ரோடு, காவிரி ரோட்டில் நகை கடைகளும் உள்ளன.

தீபாவளி பண்டிகைக்கு 2 வாரங்களே இருப்பதால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கைவரிசை காட்டுதவற்காக திருடர்களை கண்காணிக்க போலீசார் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கண்காணிப்பு கோபுரம்

அதன்படி மக்கள் அதிகமாக கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி மணிக்கூண்டு, கிருஷ்ணா தியேட்டர், பன்னீர்செல்வம் பூங்கா, காளைமாட்டு சிலை, முனிசிபல் காலனி, ஈரோடு பஸ் நிலையம் ஆகிய 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "இந்த கோபுரங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. கூட்டங்களை கண்காணிக்கவும், பொதுமக்கள் நடவடிக்கையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த கேமராக்கள் பயன்படும். மேலும், போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். கிருஷ்ணா தியேட்டர், பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் எல்.இ.டி. டிஜிட்டல் திரை அமைக்கப்படும். ஒலிபெருக்கி மூலமாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்", என்றனர்.


Next Story