ரேஷன் கடைகளில் போலீசார் சோதனை


ரேஷன் கடைகளில் போலீசார் சோதனை
x
தினத்தந்தி 30 Jun 2023 6:45 PM GMT (Updated: 1 July 2023 11:42 AM GMT)

தென்காசி பகுதியில் ரேஷன் கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

தென்காசி

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவின் படி, மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு சினேகா பிரியா அறிவுரையின்படி நெல்லை சரக துணை சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையில் தென்காசி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் குடோன் மற்றும் தென்காசி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். மேலும் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்பது குறித்தும் வாகன சோதனையும் செய்தனர். ரேஷன் பொருட்கள் முறையாக பொதுமக்களுக்கு சென்றடைகிறதா? என்பது குறித்தும் ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாகவும் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story