போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்


போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்
x

திருச்சிற்றம்பலம் பகுதியில் திருட்டு அதிகரித்துள்ளது. எனவே போலீசாரின் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்:

திருச்சிற்றம்பலம் பகுதியில் திருட்டு அதிகரித்துள்ளது. எனவே போலீசாரின் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளி மாநில தொழிலாளர்கள்

அண்மைக்காலமாக தமிழகத்தில் உள்ள நகரங்கள் முதல் கிராமங்கள் வரை வெளி மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கட்டுமான பணிகள், உணவகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை ஆகியவற்றில் தீவிரம் காட்டுகின்றனர். மேலும், கிராம பகுதிகளில் ஐஸ்கிரீம் மற்றும் பஞ்சு மிட்டாய் ஆகியவற்றையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

சுகாதார சீர்கேடு

இந்த நிலையில் வெளி தொழிலாளர்கள் திருச்சிற்றம்பலம் பகுதியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் அவர்கள் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

மேலும் திறந்தவெளியை கழிவறை போல பயன்படுத்தி வருவது சுகாதார சீர்கேடுகளுக்கு வழிவகுப்பதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

தொடர் திருட்டு

இந்த நிலையில் சமீப காலமாக திருச்சிற்றம்பலம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருட்டும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. எனவே, வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை பார்க்கும் பகுதிகளையும் அவர்களை வேலைக்கு அமர்த்தும் நபர்களையும் சம்பந்தப்பட்ட பகுதிகளின் போலீசார் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story