சிவில் பிரச்சனைகளில் போலீசார் தலையிடக்கூடாது - ஏடிஜிபி அருண் சுற்றறிக்கை


சிவில் பிரச்சனைகளில் போலீசார் தலையிடக்கூடாது - ஏடிஜிபி அருண் சுற்றறிக்கை
x
தினத்தந்தி 10 Jan 2024 12:28 AM IST (Updated: 10 Jan 2024 1:52 AM IST)
t-max-icont-min-icon

பணத்தகராறு, சொத்துத்தகராறு, வழித்தட தகராறு போன்ற சிவில் விவகாரங்களில் தலையிடுவதை போலீசார் தவிர்க்க வேண்டும் என ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சிவில் பிரச்சினைகளில் அவசியம் இன்றி போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஏடிஜிபி அருண் கூறியதாவது;

எப்.ஐ.ஆர், சி.எஸ்.ஆர் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளிட்டவை இன்றி எந்த ஒரு மனுக்கள் மீதும் காவல்துறை விசாரணையும் நடத்தக் கூடாது. பணத்தகராறு, சொத்து தகராறு, வழித்தட தகராறு போன்ற சிவில் விவகாரங்களில் தலையிடுவதை போலீசார் தவிர்க்க வேண்டும்.

சிவில் விவகாரங்களில் தலையிடுவது அவசியம் என கருதினால் மாவட்ட எஸ்.பி அல்லது காவல் ஆணையர்களிடம் அனுமதி பெற வேண்டும். உரிய ஒப்புதல் இன்றி விசாரணை மேற்கொண்டால் சட்ட விரோதமாக கருதப்படும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்." என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story