நல்லூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்


நல்லூர் போலீஸ் நிலையத்தில்  பாதுகாப்பு கேட்டு கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
x

நல்லூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்

நாமக்கல்

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள சோழசிராமணி மாரப்பம்பாளையத்தை சேர்ந்த பழனி மகன் சுரேஷ் (வயது 21). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய அக்காள் கருந்தேவன்பாளையத்தில் வசித்து வரும் நிலையில் சுரேஷ் அடிக்கடி அக்காள் வீட்டுக்கு சென்று வந்தார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த லோகநாதன் மகள் புனித மணி (21) என்பவருக்கும், சுரேசுக்கும் பழக்கம் ஏற்பட்டது. புனிதமணி கந்தம்பாளையத்தில் உள்ள மகளிர் கலைக்கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் திருமணம் செய்ய முடிவு செய்த காதல் ஜோடி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி திருச்செங்கோட்டில் மலையடிவாரத்தில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நல்லூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சுரேஷ் குடும்பத்தினருடன் புனித மணியை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story