போலீஸ் நிலைய பழைய கட்டிடத்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்க வேண்டும்


போலீஸ் நிலைய பழைய கட்டிடத்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்க வேண்டும்
x

திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய பழைய கட்டிடத்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய பழைய கட்டிடத்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போலீஸ் நிலைய கட்டிடம்

திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி முதல் திருமுருகநாதசாமி கோவில் அருகே செயல்பட்டு வந்தது. இதையடுத்து ராக்கியாபாளையத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. கடந்த மாதம் 18-ந்தேதி முதல் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையம் அங்கு முழுமையாக செயல்பட தொடங்கியது.

இதனால் போலீஸ் நிலைய பழைய கட்டிடம் மூடப்பட்டது. அந்த கட்டிடத்தின் அருகே திருமுருகன்பூண்டி அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு போதிய வசதிகள் இல்லை.

வழங்க வேண்டும்

எனவே பூட்டிய நிலையில் யாருக்கும் போலீஸ் நிலைய கட்டிடத்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல் அதன் அருகிலேயே தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. எனவே போலீஸ் நிலைய கட்டிடத்தின் ஒரு பகுதியை தபால் நிலையத்திற்கும் வழங்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை, திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாகம், தபால்துறை ஆகியவை சரியான முடிவு எடுத்து போலீஸ் நிலைய பழைய கட்டிடத்தை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story