போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 1,993 பேர் எழுதினர்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 1,993 பேர் எழுதினர்
x

திருப்பூரில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்துத்தேர்வில் 1,993 பேர் தேர்வு எழுதினார்கள்.

திருப்பூர்

திருப்பூர்,

திருப்பூரில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்துத்தேர்வில் 1,993 பேர் தேர்வு எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 486 பேர் தேர்வு எழுதவரவில்லை.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கான சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் பதவிக்கான முதன்மை தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் காந்திநகர் அங்கேரிப்பாளையம் ரோடு கொங்குவேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், குமார் நகர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியிலும் நேற்று நடைபெற்றது. காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முதன்மை தேர்வும், மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ்மொழி தகுதித்தேர்வும் நடைபெற்றது.

கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1,967 ஆண்களும், பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் 512 பெண்களும் தேர்வு எழுதுவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 479 பேர் தேர்வு எழுத தேர்வு மையங்கள் தயார் நிலையில் இருந்தன. தேர்வு தொடங்குவதற்கு முன் தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வர அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு வந்தனர்.

486 பேர் தேர்வு எழுதவில்லை

அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு சென்று தேர்வு எழுதினார்கள். அதன்படி கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 1,599 ஆண்கள் தேர்வு எழுதினர். 368 பேர் தேர்வு எழுதவரவில்லை. பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் 394 பேர் தேர்வு எழுதினர். 118 பெண்கள் தேர்வு எழுதவிரவில்லை. மொத்தம் மாவட்டத்தில் 1,993 பேர் தேர்வு எழுதினர். 486 பேர் தேர்வு எழுதவரவில்லை. காலதாமதமாக வந்தவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையில் காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.



Next Story