திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு பணி
சுதந்திர தின விழாவையொட்டி திருவாரூர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனை செய்தனர்.
திருவாரூர்:
சுதந்திர தின விழாவையொட்டி திருவாரூர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனை செய்தனர்.
சுதந்திர தின விழா
நாடு முழுவதும் இன்று(செவ்வாய்க்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்காணிப்பு பணி
ரெயில் நிலையம், தண்டவாளம் போன்ற இடங்களில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜி.ரவிச்சந்திரன், துரைசாமி, ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டி.ரவிச்சந்திரன், ஏட்டுகள் குமார், சுகுணா, முத்துலஸ் ஆகியோர் பயணிகள் உடைமைகளை சோதனை செய்தனர்.
அப்போது பாதுகாப்பான பயணத்திற்கு ரெயில்வே துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு பயணிகளும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.