கலவரத்தை கட்டுப்படுத்த போலீசாருக்கு பயிற்சி


கலவரத்தை கட்டுப்படுத்த போலீசாருக்கு பயிற்சி
x

விழுப்புரத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கலவரம், வன்முறை சம்பவங்கள் நடந்தால் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று கலவரக்காரர்களை அங்கிருந்து விரட்டியனுப்பி கலவரத்தை கட்டுப்படுத்த விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் ஆகிய 4 உட்கோட்டங்களிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மேற்பார்வையில் உதவி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 10 போலீசார், 5 ஆயுதப்படை போலீசார் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர்களுக்கு கலவரத்தை கட்டுப்படுத்த வசதியாக பாதுகாப்பு உபகரணங்களான ஹெல்மெட், ஷீல்டு, துப்பாக்கி, லத்தி, கயிறு, பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு நேற்று விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில், கலவர கும்பல் மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும்போது அவற்றினை கலைக்கவும், கலவர கும்பலை கையாளும் வழிமுறைகள் குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா நேரில் பார்வையிட்டார்.


Next Story