விழுப்புரத்தில் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்த மாணவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை


விழுப்புரத்தில் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்த மாணவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
x

விழுப்புரத்தில் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்த மாணவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார், நான்குமுனை சந்திப்பு அருகில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு பஸ்களின் படிக்கட்டுகளில் மாணவர்கள் சிலர் பஸ் படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்தனர். இதைபார்த்த போலீசார் பஸ்களை நிறுத்தி பயணம் செய்த மாணவர்களை கீழே இறக்கி அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினர். மேலும் அந்த மாணவர்களிடம் இதுபோன்று பஸ்சில் ஆபத்தான பயணம் செய்யக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை செய்ததோடு நான் இனிமேல் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு சாகச பயணம் செய்ய மாட்டேன், எனக்கு படிப்புதான் முக்கியம், என்னுடைய வாழ்க்கைத்தான் முக்கியம் என மாணவர்களை சொல்ல வைத்து உறுதிமொழி ஏற்க வைத்தனர். பின்னர் அந்த மாணவர்களை மற்றொரு பஸ்சில் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.


Next Story