விக்கிரவாண்டி அருகேசாலை விபத்தில் பெண் போலீஸ் ஏட்டு படுகாயம்
விக்கிரவாண்டி அருகே நடந்த சாலை விபத்தில் பெண் போலீஸ் ஏட்டு படுகாயமடைந்தார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே பெரியதச்சூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் அமுதா (வயது 38). இவர் நேற்று தன்னுடன் பணிபுரியும் பெண் காவலர் திரிபுரசுந்தரி (37). என்பவருடன் ஒரு ஸ்கூட்டரில் அணிலாடி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்ட பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டு, மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு புறப்பட்டார். ஸ்கூட்டரை அமுதா ஓட்டினார். விக்கிரவாண்டி அடுத்த அணிலாடி கூட்டுரோடு அருகே வந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் அமுதாவின் இடது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். திரிபுரசுந்தரி காயமின்றி தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் பெரியதச்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.