போலியோ தடுப்பூசி முகாம்


போலியோ தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

போலியோ தடுப்பூசி முகாம்

கோயம்புத்தூர்

கோவை

போலியோ நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து, தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு முதல் தவணையாக 6-வது வாரத்திலும், 2-வது தவணையாக 14-வது வாரத்திலும், 3-வது தவணையாக 9 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரையிலும்(தட்டம்மை என்ற ரூபெல்லா தடுப்பூசியுடன்) போலியோ தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி கோவையில் குழந்தைகளுக்கு 3-வது தவணை போலியோ தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடைபெற்றது. அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இதில் தகுதி வாய்ந்த குழந்தைகளை முகாமுக்கு பெற்றோர் கொண்டு வந்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைத்தனர்.


Next Story