இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
x

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடந்தது.

திருவாரூர்

திருவாரூர், ஜூன்.2-

திருவாரூாில் இந்திய கம்யூனிஸ்டு் கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மாசிலாமணி, மாநில குழு உறுப்பினர உலகநாதன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் புலிகேசி, நகர செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், திருவாரூர் நகரில் ஆண்கள், பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும். தண்டலையிலிருந்து கிடாரம்கொண்டான் வரை உள்ள மாநில நெடுஞ்சாலையை இருவழி சாலையாக மாற்றி தரம் உயர்த்த வேண்டும். கோவில் மடம் அரசு புறம்போக்கு இடங்களில் குடியிருக்கும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு நிரந்தர இடம் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story