இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
x

பட்டுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடந்தது

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை நகர தேரடித் தெரு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் பேராசிரியர் பாலசந்தர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் வீரமோகன், முன்னாள் நகர செயலாளர் ரோஜாராஜசேகர் மற்றும் பலர் பேசினர். கூட்டத்தில் , பட்டுக்கோட்டை நகரில் மழைக்காலம் முடிந்த பிறகு தார்ச்சாலை அமைக்க வேண்டும். நகரில் வேகத்தடையினால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க வேகத்தடைகள் மீது வர்ணம் பூச வேண்டும். போக்குவரத்து இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story