கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நினைவு நாள்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாளையொட்டி நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு நேற்று அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அவைத் தலைவர் சேவியர் மனோகரன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், முன்னாள் நகர செயலாளர் சந்துரு, கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, அக் ஷயா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா- காங்கிரஸ்

பா.ஜனதா கட்சி சார்பில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் முத்துராமன், மண்டல பார்வையாளர் நாகராஜன், கவுன்சிலர் ரோசிட்டா திருமால் உள்பட பலர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்கள். இதே போல குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் காட்வின் ஜெயா தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் முருகேசன், மாநில போலிங் பூத் கமிட்டி தலைவர் ராதாகிருஷ்ணன், ராஜபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் கலைவாணர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேரன்கள் கிருஷ்ண சந்திரன், ராஜன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்று சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.


Next Story