பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
அண்ணா பிறந்தநாளையொட்டி வாடிப்பட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க. அ.ம.மு.க. கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அண்ணா பிறந்தநாளையொட்டி வாடிப்பட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க. அ.ம.மு.க. கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அமைச்சர் மரியாதை
அழகர்கோவில் கோட்டை வாசல் பகுதி முன்பாக, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், அ.வல்லாளபட்டி பேரூராட்சி தலைவர் குமரன், கிளை செயலாளர் முத்து பொருள், வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம், கட்சி நிர்வாகிகள் மோகன், நாகரத்தினம், அனைத்து அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக தி.மு.க. கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.
மேலும் அ.தி.மு.க. சார்பாக பெரிய புள்ளான் எம்.எல்.ஏ, மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு
வாடிப்பட்டி பஸ்நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி வாடிப்பட்டி பேரூர் தி.மு.க. சார்பாக பேரூர்செயலாளர் மு.பால்பாண்டியன் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் இனிப்பு வழங்கி அண்ணா பற்றிய புத்தகங்களை வழங்கினார். ஒன்றியசெயலாளர் பாலராஜேந்திரன், பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திக், முன்னாள் பேரூர்செயலாளர் மு.பா.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் கஜேந்திரன், முரளி, வினோத், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பாக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், ஒன்றியசெயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கணேசன், யூனியன்சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர்செயலாளர் டாக்டர் அசோக்குமார் வரவேற்றார். இதில் மகளிரணி மாவட்டசெயலாளர் லெட்சுமி, பாசறை மாவட்ட இணைச்செயலாளர் மணிமாறன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சூர்யா, வெங்கடேஸ்வரி, பிரியதர்ஷினி, பஞ்சவர்ணம், கீதா பால சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒன்றிய அவைத்தலைவர் ராமசாமி நன்றி கூறினார்.
அ.ம.மு.க.
பேரூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., மகேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் விருமப்பராஜன், வக்கீல் கோடீஸ்வரன், பேரூர் செயலாளர்கள் மதன், திரவியம், மாவட்ட துணைச்செயலாளர் வீரமாரி பாண்டியன், மீனவரணி மாவட்டசெயலாளர் ஜெயராமன், காடுபட்டிபாலு, மகாலிங்கம், உசிலைராஜேஷ் கண்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.