பூலித்தேவன் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


பூலித்தேவன் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x

நெல்லையில் பூலித்தேவன் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

திருநெல்வேலி

சுதந்திர போராட்ட வீரர் மன்னர் பூலித்தேவன் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லையில் பல்வேறு இடங்களில் பூலித்தேவன் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் பூலித்தேவன் உருவப்படத்துக்கு, மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் மேயர் பி.எம்.சரவணன், வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா, மகளிர் தொண்டர் அணி மாநில துணை அமைப்பாளர் விஜிலா சத்யானந்த், இளைஞர் அணி மாநகர அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொக்கிரகுளத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு பூலித்தேவன் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் காங்கிரஸ் அலுவலகம் முன்புள்ள பூலித்தேவன் உருவப்படத்துக்கு அப்துல்வகாப் எம்.எல்.ஏ., பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான் மைதீன், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி கரிசல் சுரேஷ் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் முரளிராஜா, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், மாவட்ட பொதுக்குழு செயலாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை மகாராஜா நகரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பூலித்தேவன் உருவப்படத்துக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ் சான்றோர் பேரவை பொறுப்பாளர் வக்கீல் சுதர்சன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில செயலாளர் உமர்பாரூக், மண்டல செயலாளர் வக்கீல் அப்துல்ஜப்பார், மாவட்ட செயலாளர் ஜமால், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் நெல்சன், தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை தென்மண்டல செயலாளர் மங்கள்ராஜ் பாண்டியன், சமூக ஆர்வலர் புல்லட் ராஜா, காங்கிரஸ் வர்த்தக அணி எம்.ஏ.சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு கைலாசபுரம் ஈரடுக்கு மேம்பாலம் அருகில் பூலித்தேவன் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு கட்சியின் மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் பூலித்தேவன் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை தொகுதி செலாளர் ரவி, நாங்குநேரி தொகுதி செயலாளர் ஆறுமுக குமார், மாநகர தலைவர் கண்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story