அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x

அண்ணா பிறந்த நாள் விழாவையொட்டி நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

திருநெல்வேலி

அண்ணா பிறந்த நாள் விழாவையொட்டி நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தி.மு.க.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க.வினர் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் ஞானதிரவியம் எம்.பி., மேயர் பி.எம்.சரவணன், யூனியன் தலைவர்கள் தங்கபாண்டியன் (பாளையங்கோட்டை), ஸ்ரீலேகா (மானூர்), மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ், பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், கவுன்சிலர்கள் ஜெகநாதன், கருப்பசாமி கோட்டையப்பன், ரவீந்தர், மத்திய மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில், துணை மேயர் ராஜூ மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மண்டல தலைவர் மகேஷ்வரி, பிரான்சிஸ், கவுன்சிலர் சுதாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நெல்லை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மேயர் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க.

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.பி. முத்துகருப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.பி.ஆதித்தன், ரெட்டியார்பட்டி நாராயணன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், துணை செயலாளர் நாராயணபெருமாள், துணை செயலாளர் உவரிராஜன் கிருபாநிதி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜான்சிராணி, இளைஞர் அணி செயலாளர் பால்துரை, ஹரிகரசிவசங்கர், ஒன்றிய செயலாளர் முத்துகுட்டி பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், வக்கீல்கள் ஜெயபாலன், அன்பு அங்கப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.

ஜனநாயக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர் நிறுவன தலைவர் செல்வம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


Next Story