பா.ஜனதா கட்சியினர் 150 பேர் கைது


பா.ஜனதா கட்சியினர் 150 பேர் கைது
x

பா.ஜனதா கட்சியினர் 150 பேர் கைது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை;

மயிலாடுதுறையில் அனுமதியின்றி ஊர்வலமாக செல்ல முயன்ற பா.ஜனதா கட்சியினர் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

அமைதி ஊர்வலம்

இந்தியா சுதந்திரம் பெற்ற போது தேசப்பிரிவினை நடந்தது. இதை கண்டித்து நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைதி ஊர்வலம் நடத்தப்படும் என பா.ஜனதா கட்சியினர் அறிவித்திருந்தனர்.இதற்கு மயிலாடுதுறை போலீசார் அனுமதி மறுத்தனர்.

150 போ் கைது

இந்தநிலையில் பா.ஜனதா மாவட்ட தலைவர் அகோரம் தலைமையில் வக்கீல் பிரிவு மாநில பார்வையாளர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் நாஞ்சில் பாலு, உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மயிலாடுதுறை வரதாச்சாரியார் பூங்காவில் இருந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர்.அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் குமார் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஊர்வலமாக செல்ல முயன்ற 19 பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

1 More update

Next Story