மகாத்மா காந்தி சிலைக்கு அரசியல்கட்சியினர் மரியாதை


மகாத்மா காந்தி சிலைக்கு அரசியல்கட்சியினர் மரியாதை
x

அரியலூரில் மகாத்மா காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரியலூர்

மாலை அணிவித்து மரியாதை

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி நேற்று நாடு முழுவதும் அவரது சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன்படி நேற்று அரியலூர் மாவட்டத்திலும் பல்வேறு கட்சிகளின் சார்பில் அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நேற்று மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காமராஜரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அவரது நினைவு நாளும் அனுசரிக்கப்பட்டது. முன்னதாக கட்சிக்கொடிஏற்றப்பட்டது. இதில் நகர காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், மாவட்ட பொருளாளர் மனோகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர், வட்டார தலைவர்கள் கர்ணன், பாலகிருஷ்ணன், அழகானந்தம், கங்காதுரை உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில், காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் செயலாளர் லட்சுமணன், பொருளாளர் காசிநாதன், நகர பொறுப்பாளர் கவின்மணி, செய்தி தொடர்பாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பஸ் நிலையம் அருகே உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன், மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு கிருஷ்ணன், அருணன், மாவட்டக்குழு சாமிதுரை உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story