வாக்குச்சாவடி முகவர்கள்- உறுப்பினர்கள் ஆய்வுக்கூட்டம்


வாக்குச்சாவடி முகவர்கள்- உறுப்பினர்கள் ஆய்வுக்கூட்டம்
x

வாக்குச்சாவடி முகவர்கள்- உறுப்பினர்கள் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கரூர்

புகழூர் நகர தி.மு.க. சார்பில் புகழூர் நகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் உறுப்பினர்களின் ஆய்வுக்கூட்டம் புகழூர் காந்திமண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புகழூர் நகர்மன்ற தலைவரும், நகரகழக செயலாளருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மூர்த்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சரவணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.இதில் புகழூர் நகர்மன்ற துணைத்தலைவர் பிரதாபன், நகர்மன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, நகர, வார்டு கழக நிர்வாகிகள், வாக்குச் சாவடி முகவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் புகழூர் நகராட்சி 8-வது வார்டை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்து கொண்டனர்.


Next Story