வாக்குச்சாவடி பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனை கூட்டம்


வாக்குச்சாவடி பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
x

வாக்குச்சாவடி பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கரூர்

தோகைமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக முகவர்கள் (பூத் கமிட்டி-பி.எல்.ஏ.2) வாக்குச்சாவடி பூத் கமிட்டி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஆர்டிமலை சமுதாயக்கூடம் வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய செயலாளர் புகழேந்தி, தோகைமலை ஒன்றிய குழுத்தலைவர் சுகந்தி சசிகுமார், கவுன்சிலர் சின்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட பிரதிநிதி சந்திரன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம், குளித்தலை சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பெரியகருப்பண் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.

கூட்டத்தில், வடசேரி, புழுதேரி, ஆர்டிமலை, புத்தூர், தளிஞ்சி, ஆலத்தூர், ஆர்ச்சம்பட்டி, நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி ஆகிய 10 ஊராட்சிகளுக்கான பூத்கமிட்டி நிர்வாகிகள், வருகிற 24-ந்தேதி திருப்பூர் மாவட்டம் படியூரில் நடைபெறும் வாக்குச்சாவடி பூத்கமிட்டி முகவர்கள் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பூத்கமிட்டி நிர்வாகிகள் திறம்பட செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இதில், ஒன்றிய அவைத்தலைவர் சேகர், மாவட்ட பிரதிநிதிகள் லோகநாதன், செல்வம், ஒன்றிய பொருளாளர் ராமு, விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் இளங்கோவன், வர்த்தக அணி ரெங்கராஜ், நிர்வாகிகள் காமராஜ், அசோக்குமார், ஜெகதீசன், பூத் கமிட்டி முகவர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story