மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி பாலிடெக்னிக் மாணவர் பலி


மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி பாலிடெக்னிக் மாணவர் பலி
x

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி பாலிடெக்னிக் மாணவர் பலி

திருவாரூர்

மன்னார்குடி அருகே மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி பாலிடெக்னிக் மாணவர் பலியானார். மேலும் விவசாயி படுகாயமடைந்தார்.

பாலிடெக்னிக் மாணவர்

மன்னார்குடியை அடுத்த அசேஷம் சுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் திலகவதி. இவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது மகன் கபிலன் (வயது 19). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் 2-ம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார். தற்ேபாது விடுமுறை என்பதால் அசேஷத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.

நேற்று கபிலனை பார்க்க அவரது நண்பர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது கபிலன் நண்பனின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பால் வாங்குவதற்காக அசேஷம் மெயின் ரோட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு முன்பு சென்ற மொபட்டின் மீது கபிலன் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

விவசாயி படுகாயம்

இதில் மொபட்டில் சென்ற மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டையை சேர்ந்த விவசாயி ஜெயராமனும் (75), கபிலனும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கபிலன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நேற்று மாலை சிகிச்சை பலனின்றி கபிலன் இறந்தார். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story