மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ளமுனியப்பர் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள முனியப்பர் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா்.
கள்ளக்குறிச்சி
மூங்கில்துறைப்பட்டு,
ஆடி மாதத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில், பொதுமக்கள் தங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதூர்ஏரிக்கரை அருகிலுள்ள முனியப்பர் கோவிலில் நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
தொடர்ந்து முனியப்பருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story