பொங்கல் பண்டிகை: சென்னையில் நாளை 340 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


பொங்கல் பண்டிகை: சென்னையில் நாளை 340 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
x

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை முழுவதும் நாளை 340 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்காக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல போக்குவரத்துத்துறை சார்பில் நாளை முதல் 14ம் தேதி வரை 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 3 நாட்களுக்கு கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகளும், மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 6,183 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு, கே.கே.நகர், மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை திருநாளை முன்னிட்டு சென்னையில் நாளை முதல் 340 கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், பூவிருந்தமல்லி பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்து நாளை முதல் 14ம் தேதி வரை கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story