பொங்கல் பண்டிகை: சென்னை - கொல்லம் இடையே சிறப்பு கட்டண ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பொங்கல் பண்டிகை: சென்னை - கொல்லம் இடையே சிறப்பு கட்டண ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

பண்டிகைக் காலாத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை - கொல்லம் இடையே சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பண்டிகைக் காலாத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை - கொல்லம் இடையே சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்படுகிறது.

கொல்லத்திலிருந்து ஜனவரி 15-ந் தேதி நள்ளிரவு 1.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரெயில்(வண்டி எண்:06080) மாலை 5.15 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் வந்தடையும்.

மறுமார்கமாக, சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரலிருந்து ஜனவரி 17-ந் தேதி மதியம் 3.10 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரெயில்(06079) திருப்பூர்,சேலம்,ஈரோடு வழியாக மறுநாள் காலை 5.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த ரெயில் கூடுதல் நிறுத்தமாக பெரம்பூரில் நிறுத்தப்படும்.

இதனை தொடர்ந்து, சென்னை எழும்பூரிலிருந்து நாளை காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் மதுரை,நெல்லை வழியாக இரவு 1 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

Next Story