பொங்கல் பரிசு தொகுப்புகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட கோரிய வழக்கு - மதுரை ஐகோர்ட்டு அதிரடி
பொங்கல் பரிசு தொகுப்புக்கான பொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை,
ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்களான அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாய பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே வாங்கினால் விவசாயிகளும் பலனடைவர்.
ஆகவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து தமிழக கூட்டுறவுத்துறை செயலர், தமிழக வேளாண்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Related Tags :
Next Story