பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்


பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம், கடையம் பகுதியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் ஜெகதீசன், நிர்வாகிகள் மலைச்சாமி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வெங்காடம்பட்டி பஞ்சாயத்து கோவிலூற்று ேரஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு, பஞ்சாயத்து தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். கூட்டுறவு சங்க தலைவர் செல்லையா, செயலாளர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரேஷன் கடை ஊழியர் மணிகண்டன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ரவணசமுத்திரம் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு கூட்டுறவு சங்க தலைவர் உச்சி மாகாளி தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் முகமது உசேன், பயனாளிகளுக்கு பொங்கல் பரிசை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ராமலட்சுமி சங்கிலி பூதத்தான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கடையம், ரவணசமுத்திரம், வீராசமுத்திரம், மந்தியூர், சம்பன்குளம் ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகை மற்றும் பொருட்களை கடையம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயக்குமார் பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்சினை ஏற்பட்டதால் தென்காசி மாவட்ட வழங்கல் அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, சர்வர் பிரச்சினையை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது.


Next Story