9-ந்தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்


9-ந்தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

9-ந்தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்படுகிறது என கலெக்டர் கூறினார்.

ராமநாதபுரம்

தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பான முழுகரும்பு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 ஆகியவை வழங்கப்பட உள்ளது. இதற்காக அந்தந்த பகுதி ரேஷன் கடைகள் மூலம் கூட்ட நெரிசலை தவிர்க்க கடந்த 3-ந்தேதி முதல் வரும் 8-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது.

9-ந்தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். ரேஷன் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசு பச்சரிசி, சர்க்கரை வாங்க துணிப்பை கொண்டு வர வேண்டும். டோக்கன் பெற்றவர்கள் ஒதுக்கீடு செய்த நாளில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று செல்லலாம். அதேபோல இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு வினியோகம் குறித்த புகார்களை 1077 எண்ணில் தெரிவிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story