பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு


பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-11T00:17:30+05:30)

வாசுதேவநல்லூர் பகுதியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் யூனியன் தலைவன்கோட்டையில் செயல்பட்டு வரும் நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் தலைவன்கோட்டை, முள்ளிக்குளம், நகரம், பாறைப்பட்டி, பச்சேரி, கீழப்புதூர், அரியூர், ஈச்சம்பொட்டல்புதூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும், யூனியன் கவுன்சிலருமான விஜயபாண்டியன் தலைமை தாங்கி, பொங்கல் பரிசு ரூ.1,000 மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் சிதம்பர பாண்டியன், இயக்குனர் ஆறுமுககுமார் மற்றும் தி.மு.க. கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story