கரூரில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் தொடங்கியது


கரூரில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் தொடங்கியது
x

கரூரில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் தொடங்கியது.

கரூர்

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழர்களின் திருநாளாம் தை மாதம் முதல் தேதியான வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழக அரசின் சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு, 1,000 ரொக்கம் வழங்கப்பட உள்ளது.

இதையொட்டி பரிசு தொகுப்பை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் வாங்க வசதியாக டோக்கன் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கரூர் மாவட்டத்தில் அந்தந்த ரேஷன் கடைகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் நேரில் சென்று டோக்கனை வினியோகம் செய்யும் பணியை தொடங்கினர். வருகிற 8-ந் தேதிக்குள் டோக்கன் வினியோகிக்கும் பணி முடிவடைகிறது. வருகிற 9-ந் தேதி முதல் பொங்கல்பரிசு தொகுப்பு பொருட்கள் அந்தந்த கடைகளில் வினியோகம் செய்யப்படும்.

டோக்கன்

டோக்கனில் கடையின் பெயர், குடும்ப அட்டை எண், தெரு, பரிசு தொகுப்பு வழங்கப்படும் தேதி, நேரம் மற்றும் டோக்கன் எண் குறிப்பிட்டு அச்சிட்டு வழங்கப்படுகிறது. இந்த டோக்கன் பெற்றவர்கள் அந்தந்த குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். ஒரே நேரத்தில் மொத்தமாக பொதுமக்கள் ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story