மோகனூரில் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி-கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு


மோகனூரில் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி-கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு
x

மோகனூரில் பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணியை கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 403 அரிசி பெறும் ரேஷன்கார்டுதாரர்கள், 673 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 5 லட்சத்து 43 ஆயிரத்து 76 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வருகிற 9-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதை பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ரேஷன்கார்டுதாரர்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் டோக்கன் வழங்கி வருகின்றனர்.

மோகனூரில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் ரேஷன்கார்டுதாரர்களிடம் அரிசி, சர்க்கரை உள்பட குடிமைப்பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story