2023 -ம் ஆண்டு பொங்கல் பரிசு: தமிழக அரசு புதிய முடிவு என தகவல்


2023 -ம் ஆண்டு பொங்கல் பரிசு: தமிழக அரசு புதிய முடிவு என தகவல்
x
தினத்தந்தி 9 Nov 2022 4:42 AM GMT (Updated: 9 Nov 2022 6:56 AM GMT)

2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்காமல், ரொக்கமாக பணம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 2023-ம் ஆண்டு 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வேளாண்மைக்கு ஆதாரமாக உள்ள சூரியபகவான், காளை, பசுமாடு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு நடத்துவார்கள். நகர் பகுதியிலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.

இந்தநிலையில், தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து நியாயவிலைக் கடைகளின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது.

அதன்படி, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், இதில் அதிக குளறுபடி நடந்ததாக எதிர்க்கட்சியினரும், சமூக வலைதளங்களின் மூலமாகவும் கடும் விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில், 2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்த முறை எந்த பரிசு பொருளும் வழங்காமல் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரூ.1000 பணம் வழங்க முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில், இதற்கான அறிவிப்பைமுதல்-அமைச்சர் வெளியிடுவார் என கூறப்படுகிறது.


Next Story