தாம்பரம்-நெல்லை இடையே பொங்கல் சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


தாம்பரம்-நெல்லை இடையே பொங்கல் சிறப்பு ரெயில் -  தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

*தாம்பரம்-நெல்லை(வண்டி எண் - 06021) இடையே இரவு 9 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 12-ந்தேதி(வியாழக்கிழமை) தாம்பரத்திலிருந்து இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக நெல்லை-சென்னை எழும்பூர்(06022) இடையே மதியம் 1 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 13-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நெல்லையிலிருந்து இயக்கப்படுகிறது.

*தாம்பரம்-நாகர்கோவில்(06041) இடையே இரவு 7.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 13-ந்தேதி(வெள்ளிக்கிழமை) தாம்பரத்திலிருந்து இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக நாகர்கோவில்-தாம்பரம்(06042) இடையே மாலை 5.10 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 16-ந்தேதி(திங்கள்கிழமை) நாகர்கோவிலிலிருந்து இயக்கப்படுகிறது.

*கொச்சுவேலி-தாம்பரம்(06044) இடையே காலை 11.40 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 17-ந்தேதி(செவ்வாய்கிழமை) கொச்சுவேலியிலிருந்து இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக தாம்பரம்-கொச்சுவேலி(06043) இடையே காலை 10.30 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 18-ந்தேதி தாம்பரத்திலிருந்து இயக்கப்படுகிறது.

*எர்ணாகுளம்-எம்.ஜி.ஆர், சென்டிரல்(06046) இடையே இரவு 11.20 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 12-ந்தேதி(வியாழக்கிழமை) எர்ணாக்குளத்திலிருந்து இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக எம்.ஜி.ஆர். சென்டிரல்-எர்ணாகுளம்(06045) இடையே மதியம் 2.50 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 13-ந்தேதி(வெள்ளிக்கிழமை) சென்டிரலிலிருந்து இயக்கப்படுகிறது.

*தாம்பரம்-நெல்லை(06057) இடையே இரவு 10.30 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 16-ந்தேதி(திங்கள்கிழமை) தாம்பரத்திலிருந்து இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக நெல்லை-தாம்பரம்(06058) இடையே இரவு 10.30 மணிக்கு புறப்படும் பொங்கல் சிறப்பு ரெயில் ஜனவரி 17-ந்தேதி(செவ்வாய்கிழமை) நெல்லையிலிருந்து இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story