3 ஆண்டுகள் சிறை..பதவியை இழந்தார் பொன்முடி - அடுத்தது என்ன?


3 ஆண்டுகள் சிறை..பதவியை இழந்தார் பொன்முடி - அடுத்தது என்ன?
x
தினத்தந்தி 21 Dec 2023 6:08 AM GMT (Updated: 21 Dec 2023 6:17 AM GMT)

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது எம்.எல்.ஏ பதவியும் அமைச்சர் பதவியும் பறிபோக உள்ளது. பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அடுத்து உள்ள வாய்ப்புகள் என்ன என்று பார்க்கலாம்

* பொன்முடி மேல் முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்திவைத்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

*ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.

* சட்ட நடைமுறைகளை பார்த்தோம் என்றால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தகுதி இழப்பு அறிவிப்பாணையை பேரவை செயலகம் வெளியிடும்.

*சட்டப்பேரவை செயலகத்தின் அறிவிப்பாணை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு தகுதி இழப்பு நடைபெறும்.

* தகுதியிழப்புக்கு பின் திருக்கோவிலூர் தொகுதி காலி என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும்.

*காலி என அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்திற்குள் திருக்கோவிலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும்.


Next Story