பொன்முடிக்கு சிறை: உயர் கல்வித்துறை பொறுப்பு யாருக்கு? வெளியாகும் தகவல்கள்


x
தினத்தந்தி 21 Dec 2023 6:29 AM GMT (Updated: 21 Dec 2023 6:31 AM GMT)

பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது எம்.எல்.ஏ பதவி காலியாக உள்ளது.

சென்னை,

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது எம்.எல்.ஏ பதவி காலியாக உள்ளது. இதனால் அமைச்சர் பொறுப்பும் தானாகவே பறிபோய்விடும்.

பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித்துறை பொறுப்பு அடுத்து யாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேசிடமே கூடுதல் பொறுப்பாக உயர்கல்வித்துறை பொறுப்பும் வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.


Next Story