பொன்னர் சங்கர் நாடக விழா


பொன்னர் சங்கர் நாடக விழா
x

பொன்னர் சங்கர் நாடக விழா நடைபெற்றது.

திருச்சி

உப்பிலியபுரம், செப்.8-

உப்பிலியபுரம் ஒன்றியம் சிறுநாவலூர் ஊராட்சியிலுள்ள எஸ்.என்.புதூரில் பொன்னர்சங்கர் நாடகவிழா நடைபெற்றது. தங்காளுக்கு கிளி பிடிப்பதிலிருந்து, படுகளம் வரையிலான சரித்திர நிகழ்வுகள் உள்ளூர்வாசிகள் 20 பேர் பங்கேற்க, நான்கு நாட்களாக நாடகமாக நடைபெற்றன. அழிந்து வரும் நாடகக் கலையை உயிர்ப்பிக்கவும், இளைய தலைமுறையினருக்கு பொன்னர் சங்கர் வரலாற்றை தெரிவிக்கவும் வருடம் தோறும் இது நடத்தப்படுவதாக நாடகக்குழுவினர் தெரிவித்தனர்.


Next Story