கோவில் மண்டல பூஜை


கோவில் மண்டல பூஜை
x

கோவில் மண்டல பூஜை நடந்தது.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா செங்குடி ஊராட்சி மேலச் செங்குடி கிராமத்தில் பத்திரகாளியம்மன், கருப்பணசாமி கோவில் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் மண்டல பூஜை, யாகசாலை பூஜை நடந்தது. மணிகண்டன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து இசை வாத்தியங்கள் முழங்க பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், சந்தனம் இளநீர், பன்னீர், மஞ்சள் உள்பட 21 வகையான திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. மண்டல பூஜையையொட்டி மேலச்செங்குடி கிராம பொதுமக்களும் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை பத்திரகாளியம்மன் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மேலச்செங்குடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story