முருகன் கோவிலில் முப்பழ பூஜை


முருகன் கோவிலில் முப்பழ பூஜை
x

முருகன் கோவிலில் முப்பழ பூஜை நடந்தது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் முருகன் கோவிலில் முப்பழம் பூஜையையொட்டி 33 வகை யான அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக குமரக் கடவுள் முருகனுக்கு எலுமிச்சம் பழச்சாறு, திரவியப் பொடி, அரிசி மாவு, நெல்லிப்பொடி, நாவல் பொடி, பாசிப் பயத்தம் பொடி, மஞ்சள் பொடி, பஞ்சகவ்யம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், ஆரஞ்சு பழச்சாறு, திராட்சை, நார்த் தங்காய் சாறு, சாத்துக்குடிசாறு, மாதுளை, கொய்யா, ஆப்பிள், அண்ணாசி, பலாப்பழம், மலைவாழைப்பழம், மாம்பழம், இளநீர், பன்னீர், கும்ப தீர்த்தம், வலம்புரி சங்கு தீர்த்தம் உள்ளிட்ட 33 அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து நவநீதகிருஷ்ணன் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், இசை வாத்தியங்களுடன் அலங்கார கும்பம் புறப்பாடு நடந்தது. நிகழ்ச்சியில் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story