காந்தேஸ்வரி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா


காந்தேஸ்வரி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
x
தினத்தந்தி 1 Aug 2023 6:45 PM GMT (Updated: 1 Aug 2023 6:47 PM GMT)

சிவகிரி காந்தேஸ்வரி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரியில் தென்காசி- மதுரை தேசிய நெடுஞ்சாலையின் அருகே மண்டபம் தெருப்பகுதியில் காந்தேஸ்வரி சமேத இலக்கனேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத பூக்குழி திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கல்யாண வைபோகம் தபசு காட்சி கோலத்தில் குமாரி அம்மன், மீனாட்சி அம்மன், காளியம்மன் அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடந்தது.

9-ம் திருநாளான நேற்று முன்தினம் காலை கோவில் முன்பு வேத பராயணம் முறைப்படி அக்னி வளர்க்கப்பட்டது. பின்னர் இரவு 7 மணிக்கு செப்பு சப்பரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. அதனை தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் பூங்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் அக்னி சட்டிகளுடனும், கையில் குழந்தைகளுடனும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.


Next Story