மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளப்பயிரில் படைப்புழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வழி தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளப்பயிரில் படைப்புழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வழி தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
x

மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளப்பயிரில் படைப்புழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வழி தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளப்பயிரில் படைப்புழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வழி தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இறவைப் பாசனம்

மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு தென்னை, வாழை, நெல், கரும்பு மற்றும் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் பருவமழைக்காலங்களில் அதிக அளவில் மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுமுழுவதும் கோழித்தீவன உற்பத்திக்காக மக்காச்சோளத்தின் தேவை அதிக அளவில் உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு சீசன் இல்லாத காலங்களில் இறவைப் பாசனத்தில் மக்காச்சோள சாகுபடி மேற்கொள்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது மக்காச்சோள சாகுபடியில் படைப்புழுக்களின் தாக்குதல் மிகப்பெரிய சவாலாக மாறிவருகிறது. பயிர்களின் இளம் பருவத்திலேயே படைப்புழுக்களின் தாக்குதல் தீவிரமாக இருப்பதால் மகசூல் இழப்பு அதிக அளவில் உள்ளது.

குருத்துகள் சேதம்

மடத்துக்குளம், குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழுக்களின் தாக்குதல் அதிக அளவில் உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

செலவு குறைந்த சாகுபடியாகக் கருதப்பட்ட மக்காச்சோள சாகுபடி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய படைப்புழு தாக்குதலுக்குப் பிறகு அதிக செலவு பிடிக்கும் விஷயமாக மாறிவிட்டது. ஆரம்ப நிலை முதல் அறுவடை வரை பல நிலைகளிலும் மருந்து தெளித்து படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறோம். ஆனால் மருந்து தெளித்தும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் புழுக்களின் தாக்குதல் அதிக அளவில் உள்ளது. அவை குருத்துக்களைத் தின்று சேதப்படுத்துவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

இந்த பகுதியில் குறைந்த பரப்பளவிலேயே மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இதனால் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதற்காக தாய்ப்பூச்சிகள் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் குவிந்து விடுகிறது.இதனால் படைப்புழுக்களின் உற்பத்தி அதிக அளவில் உள்ளது.எனவே வேளாண்மைத்துறையினர் படைப்புழுக்களை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

------------

2 காலம்

குமரலிங்கம் பகுதியில் படைப்புழுக்களால் சேதப்படுத்தப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிரை படத்தில் காணலாம்.

Next Story