ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர்கள் போராட்டம்


ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர்கள் போராட்டம்
x

துப்புரவு தொழிலாளர்களின் குறைதீர்க்கும் ஆணையம் அமைக்கக்கோரி ராமநாதபுரத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்


துப்புரவு தொழிலாளர்களின் குறைதீர்க்கும் ஆணையம் அமைக்கக்கோரி ராமநாதபுரத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சண்முகராஜன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் ராஜன், சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் பெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

நிகழ்ச்சியில், பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தமிழக அரசு துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைதீர் ஆணையம் அமைக்க வேண்டும், நீண்ட காலமாக பணிசெய்யும் தொழிலாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம், குறைந்தபட்ச கூலி திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

வலியுறுத்தல்

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும். துப்புரவு தொழிலாளர் களுக்கு 10 வருடம் சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். குப்பை பிரிப்பதில் தொழிலாளர்களை வன்கொடுமை செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிகழ்ச்சியில், ஏராளமான உள்ளாட்சித்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story