அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு சன்மானம் அறிவித்தஉத்தரபிரதேச சாமியாரின் உருவப்படம் எரிப்பு


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு சன்மானம் அறிவித்தஉத்தரபிரதேச சாமியாரின் உருவப்படம் எரிப்பு
x
சேலம்

தாரமங்கலம்

சனாதனம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா கண்டனம் தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சன்மான அறிவிப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தாரமங்கலம் ஒன்றிய திராவிடர் விடுதலை கழகத்தினர் அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உத்தரபிரதேச சாமியாரின் உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தினர்.

திராவிடர் விடுதலை கழக நிர்வாகி அஜித்குமார் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார், மாவட்ட இளைஞர் அணி தலைவர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தார். கே.ஆர். தோப்பூர் கண்ணன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். முடிவில் குடந்தை பாலன் நன்றி கூறினார்.


Next Story