(ஆல்ட்)சாமியாரின் உருவப்படம் எரிப்பு
சாமியாரின் உருவப்படம் எரிப்பு
கோவை
கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி மற்றும் துடியலூர் பகுதி கழகம் சார்பில் கோவையை அடுத்த துடியலூர் பஸ்நிறுத்தம் அருகே தி.மு.க.வினர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து பேசிய அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியார் என்ற சாமியாரை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். தொடர்ந்து அவரது உருவ படத்தினை தீயிட்டு கொளுத்தினர். போலீசார் அவர்களை தடுத்தனர்.
இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சூரியன் தம்பி, பகுதி இளைஞர் அணி நிதியரசு, மாவட்ட தொழிலாளர் அணி துணை நிர்வாகிகள், தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல் திராவிடர் தமிழர் கட்சி சார்பில் சனாதன ஒழிப்பு ஆர்ப்பாட்டம் கோவை ரேஸ்கோர்சில் உள்ள தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்தது. தலைவர் வக்கீல் வெண்மணி தலைமையில் சாமியாரின் உருவப்படத்தை தீயிட்டு எரிக்க முயன்றனர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த உருவப்படத்தை அவர்களிடம் இருந்து பறித்துச்சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை ரவிக்குமார், திராவிடர் விடுதலை சுயமரியாதை இயக்க நேருதாஸ், த.பெ.தி.க. சாஜித், புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், மக்கள் அதிகாரம் மூர்த்தி, வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு இயக்க காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.